ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா? – தனிநபர்களின் அந்தரங்க உரிமைகள் பறிபோகும் அபாயம்

பஞ்சாப் மாநிலத்தில் வெளிவரும் தினசரி நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில் நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. அதுவும் ரூ.500 கொடுத்தால் ஆதார் தகவல்களை விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நாளிதழில் பணிபுரியும் ஒரு செய்தியாளருக்கு, அடையாளம் தெரியாத ஒரு நபர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த செய்தியாளர் இதுகுறித்த விசாரணையில் இறங்கினார். அதன்படி பேடிஎம் மூலம் ரூ.500 அனுப்பியுள்ளார். உடனே செய்தியாளருக்கு ஒரு ஆதார் தகவல்கள் குறித்த இணையதளம் மற்றும் அதன் கடவுச் சொல் வந்துள்ளது.

அந்த இணையதளத்தில் கோடிக்கணக்கான மக்களின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி என அனைத்து தகவல்களும் இருந்துள்ளது. இதையடுத்து அந்த செய்தியாளர் சண்டிகர் பகுதி தேசிய தனிநபர் அடையாள (உதாய்) ஆணையத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுபோன்று வெறும் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டும் இன்றி முன்னரே ஆதார் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ஆதார் தனிநபர்களின் அந்தரங்க உரிமையை பறிப்பதாகவும், பயோமெட்ரிக் வழிமுறை சரியாக வேலை செய்வதில்லை எனவும் கூறி உள்ளார்.

ஆனால் இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் (உதாய்) விளக்கம் அளித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top