இந்தியா – இஸ்ரேல் செய்து கொண்ட ரூ.3,250 கோடி ஏவுகணை ஒப்பந்தம் ரத்து

இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் ரூ.3,100 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

பீரங்கிகளை தகர்க்கவல்ல “ஸ்பைக்ஸ்” ரக ஏவுகணைகளை இஸ்ரேல் நாட்டின் ‘ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்’ என்ற நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.3,250 கோடி) ஸ்பைக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்காக 2014–ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துவிட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரபேல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இஷாய் டேவிட் நேற்று வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘‘பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தத்தை ரத்து செய்து இருப்பதாக இந்தியாவின் ராணுவ அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு வந்துள்ளது.

இதனால் நாங்கள் வருத்தம் அடைகிறோம். அதே நேரம், இந்திய ராணுவ அமைச்சகத்துடன் நாங்கள் எப்போதும் போல் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’’ என்றார்.

பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ 4 நாள் பயணமாக வருகிற 14–ந் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் டிரம்ப் அறிவித்தார். இதை தொடர்ந்து பாலத்தீனத்தில் போராட்டம் வெடித்தது. இதை தொடர்ந்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்த டிரம்ப், தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அமெரிக்கா இரு நாடுகள் இணைந்து பாலத்தீன மக்களை ஒடுக்கிவருகிறது என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஜெருசலேம் விவகாரம் குறித்து டிரம்ப் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா. பொதுச்சபை வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்தன. இந்த தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்த திர்மன்னம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாலத்தினர்களை ஒடுக்கிவரும் இஸ்ரேல் உலக நாடுகளின் ஒட்டுமொத்த கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு இஸ்ரேல் உடன் இந்தியாவின் இந்த ராணுவ ஒப்பந்தம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் செயல் கண்டனத்துக்குள்ளாகும் என்ற பார்வையிலே இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது என்று கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top