முத்தலாக் ஒழிப்பு மசோதா; முஸ்லிம் பெண்களை பா.ஜ.க. தவறாக வழிநடத்துகிறது: மம்தா பானர்ஜி

பாராளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் ஒழிப்பு மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி முத்தலாக் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் பெண்களை பா.ஜ.க. தவறாக வழிநடத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இந்த பழுதான முத்தலாக் மசோதாவால் பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிக்க முடியாது. மாறாக, இந்த மசோதாவால் பெண்களுக்கு பாதிப்பு தான் அதிகமாக இருக்கும்,

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், எங்களது கட்சியில் 33 சதவீதம் பெண்கள் எம்.பி.க்களாக உள்ளனர். பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம். பெண்களுக்கான பேறு கால விடுப்பை நாங்கள் அதிகரித்து உத்தரவிட்டுள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அசிங்கமான அரசியலை நடத்தி வருகிறது.

அனைத்து மத நம்பிக்கைகளிலும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். துர்கா தேவி பூஜையிலும் கலந்து கொண்டுள்ளேன். ஈத் பண்டிகையிலும் பங்கேற்றுள்ளேன். இதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகையின் நள்ளிரவு பிரார்த்தனையிலும் பங்கேற்றுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top