அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யாவின் `சவரக்கத்தி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

இயக்குநர் ராம் – பூர்ணா நடிப்பில், அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி உருவாகியுள்ள படம் `சவரக்கத்தி’. இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜி.ஆர்.ஆதித்யா.

இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார்.

கிராம மக்களின் வாழ்வியல் சூழலை பின்னணியாக வைத்து உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படம் தணிக்கை குழுவில் யு சான்றிதழை பெற்றிருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பல ஹாலிவுட் படங்களை வெளியிட்ட க்ரைக்ஸ் சினி கிரியேஷன்ஸ் கைப்பற்றியது. படம் பிப்ரவரியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top