ரஜினியின் ஆன்மிகத்தை அரசியலில் பயன்படுத்தவது தவறாக முடியும் – டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விருப்பம். எனக்கு கடவுள் பக்தி இருக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. ஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்தவது தவறாக போய் முடியும் என்பதுதான் எனது எண்ணம்.

இந்துக்கள் பெரும் பான்மையாக இருக்கிறோம், இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள், கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஜைனர்கள் இருக்கிறார்கள். சீக்கியர்கள் இருக்கிறார்கள். இதுபோல பல மதத்தினரும் இருக்கிறார்கள். மதம் என்பது வாழ்க்கை முறை. இறை வழிபாடு என்பது நம்மை நாமே ஒழுக்கப்படுத்திக் கொள்வதற்காக இருப்பது. அதை அரசியலில் கொண்டு வந்தால் வேறு மாதிரி தவறாக போய் விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top