ரஜினியின் காவலனாக என் பயணம் தொடரும் – நடிகர் லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற பெயரில் இணையதள பக்கத்தை தொடங்கி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் ஆதரவி அளிக்கும்படி தெரிவித்திருந்தார். மேலும் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் ரஜினி பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் ரசிகர் மன்றங்களை இணைக்கவும், ஆட்சேர்ப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு எதிர்ப்பும் கெளப்பியுள்ளது. ரஜினியை நடிகனாக மட்டுமே நங்கள் ஏற்க முடியும் அவரை அரசியலில் அமர்த்தி பார்க்க விரும்பவில்லை என்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சினிமா துறையில் அவரது தீவர ரசிகனாக இருக்கும் நடிகர் ராகவா லாரன்சும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் அவர் அரசியலுக்கு வருவாறா என்ற கேள்விக்கு தான் 10 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டதாகவும், அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள். நான் அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்கிறேன். மேலும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஜினி இல்லையேல் நானில்லை என்றார்.

அரசியல் பிரவேசம் குறித்து லாரன்சிடம் கேட்ட போது, அவர் அரசியலில் ரஜினியின் தீவர தொண்டனாக, ஒரு காவலனாக தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆவடியில் எனது தாய்க்கு கட்டிய கோவிலில் இருந்து வருகிற 4-ஆம் தேதி ரஜினியின் காவலனாக எனது பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே வருகிற 4-ஆம் தேதி லாரன்ஸ் தனது அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top