விஜயின் 62வது படத்தின் இசையமைப்பாளர் யார்?

`மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தம் ஆகியுள்ளார், படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுதவிர கலை பணிகளை சந்தானம் கவனிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்திற்கு பிறகு விஜயின் 62-வது படத்திற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.

படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top