ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்துக்கொள்வதாக பாலஸ்தீன் அறிவிப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் டிரம்ப் அறிவித்தார். இதை தொடர்ந்து பாலத்தீனத்தில் போராட்டம் வெடித்தது. இதை தொடர்ந்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்த டிரம்ப், தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியது. அப்பாவி பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.நா தீர்மானத்தை மதிக்காத அமெரிக்கா, தனது செயல்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக எத்தனை பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பங்கேற்கப்போவதில்லை என பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதர் ஹுசாம் சோம்லத்-ஐ திரும்ப அழைத்துக்கொள்வதாக பாலஸ்தீன வெளியுறவு மந்திரி ரியாத் அல் மாலிகி அறிவித்துள்ளார்.

புத்தாண்டு விடுமுறைகள் முடிந்ததும் ஹுசாம் சோம்லத் நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக ரியாத் அல் மாலிகி தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top