சூரியனில் ஆய்வு நடத்த செயற்கைகோள் அனுப்புகிறது நாசா

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான ‘நாசா’ ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டில் செய்யப்போகும் சாதனை இலக்கு குறித்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘நாசா’ விண்வெளியில் இதுவரை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த ஆண்டு சூரியனில் ஆராய்ச்சி செய்வது என முடிவு செய்துள்ளது. அதற்காக ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்புகிறது.

இது சூரியனின் அதீத வெப்பம் மற்றும் சோலார் கதிர்வீச்சு குறித்து ஆய்வு மேற்கொள்ளும். சூரியனின் மேலடுக்கு 10 ஆயிரம் டிகிரி வெப்ப நிலையில் உள்ளது. அதன் வளிமண்டலமோ அதைவிட 3 மடங்கு அதிக வெப்பத்தில் இருக்கிறது.

கார்பன்-கார்பன் கலப்புடனான ஒரு கவசத்தால் இந்த செயற்கை கோளின் கருவிகள் பாதுகாக்கப்படும், இது 70 டிகிரி அளவிலான ஆய்வுப் கருவிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

இதன்மூலம் சூரியனை தொட்டுவிட வேண்டும் என்ற முடிவில் அமெரிக்காவின் நாசா மையம் உள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தின் உட்புற ஆய்வு மற்றும் வெளிப்புற தோற்றத்தை தொடர்ந்து ஆராய திட்டமிட்டுள்ளது. தற்போது அங்கு முகாமிட்டிருக்கும் விண்கலத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top