தமிழகத்தில் மழைஅளவு;வடகிழக்கு பருவமழை,தென்கிழக்கு பருவமழை சதவீதகணக்கில்

 

தமிழ்நாட்டில் இயற்கையாக பெய்யும் மழைகளில் இரண்டு பருவமழை மிக முக்கியமானது.அது தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும்.

 

போன வருடம் வடகிழக்கு பருவமழை தமிழகத்தை வஞ்சித்து விட்டது. ஆண்டு மழைப்பொழிவில் 48 சதவீதம் மழையை இந்த காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது. ஆனால் 2016-ம் ஆண்டு ஏமாற்றிவிட்டது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் 44 செ.மீ. மழை அளவே பெற்றது.
 

.அதன் தொடர்ச்சியாக தமிழகம் வறட்சி பாதையை நோக்கி சென்றது. தண்ணீர் பஞ்சத்தால் பல பகுதிகள் வறண்டு போயின. இந்த வறட்சிக்கு ஒரு விடிவுகாலமாக தென்மேற்கு பருவமழை காலம் அமைந்தது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும்.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்துக்கு நன்றாக இருந்தது என்றே சொல்லலாம். 32 செ.மீ. மழையை பெறும் இந்த காலத்தில் 41 செ.மீ. மழை பதிவானது. இது இயல்பை விட 29 சதவீதம் அதிகம். காய்ந்து கிடந்த தமிழகத்துக்கு தென்மேற்கு பருவமழை ஆறுதலாக அமைந்தது.

2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏமாற்றத்தை சந்தித்த தமிழகம், கடந்த ஆண்டு 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை மழையை பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெருமளவு மழையை கொடுக்காவிட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. நவம்பர் மாதம் 30-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் கனமழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மொத்தமாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு மாதமும் முறையே 18 செ.மீ., 17 செ.மீ., 9 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஓரளவு மழை பெய்தாலும், டிசம்பர் மாதத்தில் 4-ந்தேதிக்கு பிறகு மழையே இல்லை.

அந்த வகையில் 2017-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 9 சதவீதம் குறைவாகவே பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, 89 சதவீதம் முதல் 110 சதவீதத்துக்குள் தான் மழை பெய்து இருக்கிறது. வழக்கம்போல இந்த முறை வடகிழக்கு பருவமழை காலமும் நமக்கு ஏமாற்றத்தையே தந்து இருக்கிறது.

என்றாலும், பெரும்பாலான ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருக்கின்றது. நிலத்தடி நீரும் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சியை தந்தாலும், விவசாயிகளுக்கு இது பெரும் ஏமாற்றம்தான்.

 

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட 9% குறைந்துள்ளபோதும் சென்னையில்  வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 19 சதவீதம் அதிகம்  பெய்துள்ளது.

 

 

நெல்லை, குமரி, நாகை மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ள சூழலில்  தமிழகத்தின்  11 மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது

 

சென்னையில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 19% அதிகம் பெய்துள்ளது ஆறுதல் அளிக்கிறது

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top