ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவிப்பு !

 

 

 

செய்திக்கட்டுரை

 

இன்று ரஜினிகாந்த் தனது  சினிமா ரசிகர்கள் சந்திப்பில் தான் அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துவிட்டார்.”எனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும்  தர்மமான அரசியல் என்றும்”  ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

 

அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்’ என்று அறிவித்தார்.

 

அதற்குப் பிறகு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து கோபாலபுரத்தில் அருகே போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு ரஜினி திரும்பினார்.

 

அப்போது ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், ‘ஆன்மிக அரசியல் என்பது நியாயமான, தர்மமான அரசியல்’ என்றார்.

 

ஏற்கனவே ஆன்மிக அரசியல் செய்யும் பாஜக தமிழ்நாட்டில் வலுபெற முடியாமல் போனது.பல வழிகளில் பாஜக தமிழ்நாட்டில் காலுன்ற செய்யும் அனைத்து முயற்சிகளும் அடிப்பட்டுபோனது. ஏன் அதிமுக வை பினாமியாக வைத்துக்கொண்டு அது சமிபத்தில் செய்த அரசியல் விளையாட்டு மக்களுக்கு புரிந்துபோய் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தார்கள். ஆடிட்டரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியரும்மான ஆர்.எஸ்.எஸ் சின் அறிவுஜீவி குருமூர்த்தி வெளிப்படையாகவே தங்களது பினாமியான இந்த அதிமுக அரசை வழிநடத்தும் எடப்பாடியையும் பன்னீர் செல்வத்தையும் ‘இம்போடேன்ட்’ என்று திட்டினார் இப்படி ஒரு வார்த்தை சொல்லி ஜெயலலிதா இருக்கும் போதோ இல்லை எம்ஜியார் இருக்கும் போதோ திட்டி விடமுடியுமா? இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தையில் திட்டியும் எந்த அதிமுக [எடப்பாடி, பன்னீர் அணி ] தொண்டருக்கும் கோபம் வரவில்லை என்பது தொண்டருக்கும் சேர்த்துதான் அந்த வார்த்தை சொல்லப்பட்டதா என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

 

ஆக, ஆன்மிக அரசியல் என்பது எப்படிப்பட்டது என்று தமிழக மக்களுக்கு தெரியும் சூழலில் ரஜனிகாந்த் ஆன்மிக அரசியல் செய்ய வருகிறேன் என்று எப்படி தைரியமாக சொல்லமுடிந்தது. ஆமாம், பாஜகவின் ஆன்மிகமாகவும் இருக்கவேண்டும் ரஜனியின் தர்மமாகவும் இருக்கவேண்டும். அதாவது பாஜகவின் ஆன்மிக தத்துவமும் ரஜினிகாந்தின் தர்மமும் சேர்ந்து இனி புதிய மொந்தையில் பழைய கள்ளைக் கொண்டு வந்து தமிழக மக்களுக்கு வெறி ஏற்ற போகிறார்கள்.

 

தமிழகம் ஒன்றும் வடமாநிலம் போல் அல்ல என்பது பாஜகவினற்கு தெரியாமலே இன்னும் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள்.இங்கு பெரியாரை நீக்கம் செய்த எந்த அரசியலும் வலுபெற முடியாது.உதாரணத்திற்கு சீமான்,  பெரியாரிஸ்ட்டுக்களால் வளர்க்கப்பட்டு வளர்ந்தபின்பு பெரியாரை கடுமையாக தாக்கி  விமர்சித்து அரசியல் செய்தார்.ஆர்கே நகரின் படுதோல்வி அவரை மீண்டும் பெரியாரை பேச வைத்திருக்கிறது. இப்போது விரக்தியின் எல்லையில்  நின்றுகொண்டு பேசுகிறார். இதை எல்லாம் பாஜக கணக்கில் எடுத்தால்தான் நாளை தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியும். ஆக, கடைசி இருப்பாக ரஜினியை கொண்டுவந்து தெருவில் இறக்கி இருக்கிறது,அவர் தொடர்ந்து தமிழ் நாட்டில் அரசியல் செய்யவேண்டும் மென்றால் பெரியாரை கையில் எடுக்கவேண்டும் இல்லையென்றால் ரஜினிகாந்தை பாபா தான் காப்பற்ற வேண்டும்

 

சேவற்கொடியோன்  

,

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top