மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு!

மோகன் ராஜா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கடந்த வாரம் வெளியான இப்படம் மோகன் ராஜாவின் முந்தைய படமான “தனி ஒருவன்” அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. மற்றும் விமர்சன ரீதியாகவும் இப்படம் தோல்வி அடைந்துள்ளது. படத்தின் தொய்வான திரைக்கதை மற்றும் வலுவான கதை கரு இல்லாததால் இப்படம் இந்த விமர்சனங்கள் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா, சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இசையை மையமாக வைத்து படம் இயக்குவதாகவும், அதற்கு சிம்பு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியானது. இப்படம் எதிர்ப்பார்த்தளவிற்கு சரியான வரவேற்பு பெறவில்லை. மற்றும் இப்படத்தை விமர்சர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் திட்டி தீர்த்தனர், இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். ஆனால் ஒருசில மாதங்களிலேயே மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி சிம்பு இயக்கி நடிக்கும் ஒரு ஆங்கில படமும் தயாராகி வருகிறது.

இப்படம் முடிந்த பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ரொமான்ஸ் மற்றும் மியூசிக் சம்பந்தப்பட்ட படம் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top