போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற அதிகாரிகள் ஆய்வு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீடு, போயஸ் கார்டனில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் வேதா நிலையம் வீடு அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நினைவிடமாக்கும் பணியை வருவாய் துறையினர் தொடங்கினர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முழுமையாக நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் இன்று தொடங்கின.

இதற்காக இன்று காலை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டில் ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீட்டை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது.

அதிகாரிகளின் ஆய்வு செய்வதையொட்டி போயஸ் கார்டனைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்றப்படுவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top