குக்கர் சின்னத்திற்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வல்லமை உள்ளது – தங்க தமிழ்செல்வன்

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வர உள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா? ஆர்.கே.நகரில் வாக்குறுதிகளை டிடிவி நிறைவேற்றுவார்.

வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ அப்போலோவில் எடுத்த வீடியோ தான். தேவைப்பட்டால் வீடியோ உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள்.

குக்கர் சின்னத்தில் நின்று, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வல்லமை எங்களிடம் உள்ளது.

தமிழக அமைச்சர்கள் குழப்பத்தில் உள்ளனர், முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் ரஜினியின் முடிவு காலம் தாழ்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top