சி.வி.குமார் தயாரிப்பில் ‘மாயவன்’ படம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் ‘4ஜி’ படம் உருவாகிவருகிறது. இதன் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து கலையரசன் நாயகனாக நடித்து வரும் படத்தை சி.வி.குமார் தயாரித்து வந்தார்.
ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக க்ரிஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, ஜனவரி 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.