வரும் ஒன்றரை ஆண்டுகள் இந்திய வீரர்களுக்கு கடும் சவால்கள்தான்; ரவிசாஸ்திரி

Bengaluru : Indian Cricket Team Director Ravi Shashtri addresses media during the training camp for the upcoming series against South Africa at NCA in Bengaluru on Friday. PTI Photo by Shailendra Bhojak (PTI9_25_2015_000099B)

சமீப காலமாக இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து சாதனை படைத்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.

இதற்கிடையே, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

பிப்ரவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடக்கிறது.

பிப்ரவரி 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நேற்று புறப்பட்டு சென்றது. அப்போது செய்தியாளர்களிடம் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி வீரர்களுடன் பயணம் செய்துள்ளேன். அவர்கள் சமீப காலமாக மிகவும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

ஆனால் நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், வரும் ஒன்றரை ஆண்டுகள் உங்கள் ஆட்டங்களுக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.

கடந்த 3 ஆண்டுக்கு முன் ஆஸ்திரேலியா சென்ற போது நன்றாக விளையாடினோம். இதேபோல் இங்கிலாந்து, இலங்கையிலும் நன்கு செயல்பட்டோம்.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் போட்டிகள் வரவுள்ளன. எனவே இந்த 18 மாத காலத்தில் இந்திய அணியினர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top