ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்

ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை குறிப்பிடுமாறு புதிய வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் வலியுறுத்தி வருகிறது.

சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் ஆதார் அட்டையில் உள்ள தங்கள் உண்மையான பெயரை பயன்படுத்தும் வகையில் பேஸ்புக் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இது இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ஒருவர் எந்தப் பெயரில் அறியப்படுகிறாரோ அதே பெயரை அவர் பேக்புக்கில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த விரும்பினோம். மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை எளிதில் அடையாளம் காணமுடியும். இது சோதனை அடிப்படையிலான முயற்சி. நாங்கள் ஆதார் எண்ணை கேட்கவில்லை. ஆதார் அடிப்படையில் பெயரை மட்டுமே கேட்கிறோம்” என்றார்.

பேஸ்புக்கின் இந்த புதிய சோதனை முயற்சி குறித்து ரெடிட், ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பலர் தங்கள் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் ஆதார் திட்டம், அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்து உள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் விசாரிக்க உள்ளது.

அது மட்டும் இன்றி பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ஆதார் தனிநபர்களின் அந்தரங்க உரிமையை பறிப்பதாகவும், பயோமெட்ரிக் வழிமுறை சரியாக வேலை செய்வதில்லை எனவும் கூறி உள்ளார்.

இந்த வழக்குகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை குறிப்பிடுமாறு புதிய வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் வலியுறுத்தி வருவது தயக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top