ஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாயணமானார்கள் இவர்களில் சிலர் மீட்கப்பட்டனர் இன்றளவும் பல மீனவர்கள் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. சுமார் 400 பேர் காணாமல் போனதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மயமானன் மீனவர்களை ,இடிக்கும் பணியில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையில் செயல்பட வில்லை என்று குமாரி மாவட்ட மீனவர்கள் 13 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புயலில் பதித்த மக்களை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்காதது ஏன் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடடர்ந்து புயல் பதித்த பகுதிகளை 19 நாள் கழித்து பிரதமர் மோடி பார்வை இட கன்னியாகுமரிக்கு விரைந்ததார்.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதன் பின்னர், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி கோரி பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அதில், புயல் நிவாரணமாக ரூ.4,047 கோடி ஒதுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட டெல்லியில் இருந்து அதிகாரிகள் குழு நேற்று சென்னை வந்தடைந்தது. இன்று அவர்கள் கன்னியாகுமரிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ஒக்கி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 133 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top