சசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சொந்தமான இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 2000 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் சென்னையில் ஜெயா டிவி தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தபட்டது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை அடையார் கற்பகம் கார்டனில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனின் இல்லத்துக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் 6 பேர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை இரவு வரை நீடித்தது.

சிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் நிறுவனம், படப்பையில் உள்ள ஸ்ரீசாய் காட்டன்ஸ், சென்னை மணிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்து இருந்தனர்.

அதிகாரிகள் நேற்று அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மாலை வரை நீடித்த இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top