பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்தனர்.

மதவாத சக்தியாக காணப்படும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா அரசுடன் தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு நெருக்கமாக உள்ளதகவும், பாரதிய ஜனதா கட்சியின் பொம்மையாக தமிழக அ.தி.மு.க. அரசு செயல்படுவதாகவும் பல கட்சி தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் தெரிவித்தன.

இதன் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதாவை புறம் தள்ளி தோல்வி அடைய செய்தனர். டிடிவி தினகரனின் இந்த வெற்றி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. டி.டி.வி.தினகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலாவை சந்திப்பதற்காக சென்னை அடையாரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று காலை 11.25 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், திருவண்ணாமலையில் பிரபலமான மூக்கு பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட டி.டி.வி.தினகரன் இரவு ஓசூரில் தங்கினார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று (வியாழக்கிழமை) மதியம் டி.டி.வி.தினகரன் சந்திக்க இருக்கிறார் என்றும், அப்போது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சசிகலாவிடம் ஆலோசிக்க இருப்பதாகவும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top