ஒக்கி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை குமரி மாவட்டம் வருகை

 

ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் நாளை டிசம்பர் 28 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்றனர். மீனவ கிராமங்கள் மற்றும் வாழை, ரப்பர் உள்ளிட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி தாக்கிய ஒக்கி புயலில் சிக்கி படகுகள் திசைமாறிச் சென்றதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். லட்சத்தீவு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட கடல் பகுதியில் கரை ஒதுங்கிய மீனவர்களை  தொடர்ச்சியாக மீட்க அரசு போதுமான உதவிகள் செய்யவில்லை.. கடலில் மூழ்கி பலியான 8 மீனவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏராளமான மீனவர்களை மீட்க வேண்டியுள்ளதாக குமரி மாவட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள் அரசு பாராமுகமாக இருக்கிறது மட்டுமல்ல குறைந்த அளவு ஆட்களே காணாமல் போயிருக்கிறார்கள் என்று தப்பாக கணக்கு சொல்கிறது.

 

கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி  குமரி மாவட்டத்திற்கு வந்தார்.30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை, ரப்பர் மரங்கள், நெற் பயிர்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. 14 ஆயிரம் மின்கம்பங்கள் வரை சாய்ந்தன. புயல் சேதம் குறித்து ஆய்வு செய்வார் என்று மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் மோடியோ வந்து இருபது நிமிசம்தான் மக்களை பார்த்தார் உடனே போய்விட்டார்

 

கன்னியாகுமரியில் அப்போது, குமரி மாவட்டத்தில் மீட்புப் பணி மற்றும் நிரந்தரமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

 

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நாளை வருகின்றனர்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சஞ்சீவ்குமார் ஜெந்தால் தலைமையிலான மத்தியக் குழுவினர் திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (டிச.28) கன்னியாகுமரி வருகின்றனர்.

 

புயலால் பாதிக்கப்பட்ட தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து, கல்படி ஏலாவில் சேதமடைந்த வாழை பயிர்கள் மற்றும் குமரி மேற்கு மாவட்டத்தில் சாய்ந்த ரப்பர் மரங்கள் மற்றும் பிற பகுதிகளில் சேதமடைந்த பயிர்கள், குளங்கள், சாலைகள் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர்.

 

புயல் சேதம் தொடர்பாக கணக்கீடு செய்யப்பட்ட சேத அறிக்கை மத்தியக் குழுவிடம் அளிக்கப்படும். தொடர்ந்து, பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top