ஒரு வாரம் கொடுத்தீங்கன்னா தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்..: தமிழ் ராக்கர்ஸுக்கு ‘பலூன்’ இயக்குநர் வேண்டுகோள்

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி நடித்திருக்கும் படம் ‘பலூன்’. யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் இணையதளங்களின் பட்டியலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது படக்குழு. மேலும், படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை தடை செய்யவும் கோரிக்கை வைத்தார்கள். இது தொடர்பாக சுமார் 2650 இணையதளங்களுக்கு தடை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட இயக்குநர் சினிஷ், “‘பலூன்’ படத்தை திருட்டுத்தமான பதிவேற்றம் செய்யவுள்ள 2650 இணையதளங்களை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எப்படியும் தமிழ் ராக்கர்ஸை நிறுத்த முடியாது. தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. ஒரு வாரம் நேரம் கொடுத்தீங்கன்னா.. என்னோட தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு 29-ம் தேதி வெளியாகவுள்ள ‘பலூன்’ படத்திற்காக, தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு இயக்குநர் சினிஷ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top