அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையைமிக்கிறார். இந்த படம் 2018 ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top