மெஸ்சி சாதனையை முறியடித்த டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன்

கால்பந்து விளையாட்டில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு மட்டும் பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடும் மெஸ்சி இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணியின் ஹாரி கேன் இதை முறியடித்துள்ளார்.

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி புர்ன்லே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டோட்டன்ஹாம் அணி 3-0 என வெற்றி பெற்றது. இந்த மூன்று கோல்களையும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன்தான் அடித்தார்.

இந்த வருடத்தில் ஹாரி கேனின் 7-வது ஹாட்ரிட் கோல் இதுவாகும். புர்ன்லே அணிக்கெதிராக அடித்த மூன்று கோல்கள் மூலம் 53 கோல்கள் அடித்துள்ளார் மேலும் இது அவருக்கு 7-வது ஹாட்ரிட் கோலாக அமைந்தது. இன்னும் ஒரு கோல் அடித்தால் மெஸ்சியின் கோல் எண்ணிக்கையை சமன் செய்து விடுவார் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் இந்த வருடத்தின் கடைசி போட்டியில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி இன்று சவுதாம்டன் அணியை எதிர்கொண்டது. இதில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி 5-2 என வெற்றி பெற்றது. இதில் ஹாரி கேன் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் 2017-ல் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மெஸ்சி 54 கோல்கள் அடித்துள்ளார். ஹாரி கேன் 56 கோல்கள் அடித்து மெஸ்சியை பின்னுக்குள் தள்ளியுள்ளார்.

மேலும், பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஒரே ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு 1995-ம் ஆண்டு ஆலன் சியேரெர் 36 கோல்கள் அடித்ததே சாதனையை இருந்தது. தற்போது 39 கோல்கள் மூலம் ஹாரி கேன் சாதனைப் படைத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top