யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிட வேண்டும்:அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவு

தற்போதுள்ள உத்தர பிரதேச முதல் மந்திரியாக உள்ள யோகி ஆதித்யநாத், மத்திய இணை மந்திரியாக உள்ள ஷிவ் பிரதாப் சுக்லா, பாஜக எம்.எல்.ஏ ஷீடல் பாண்டே உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1995 ஆம் ஆண்டு முதல் இருந்தே இவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச மாநில அரசு, மேற்கூறிய வழக்குகளை கைவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 21 ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவையில், கிரிமினல் வழக்கு தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் யோகி ஆதித்யநாத் மீது தொடுக்கப்பட்டுள்ளது. இவர் கொண்டு வரும் சட்ட திருத்தும் இந்த வழக்குகளை விசாரிக்காமல் மூடுவதற்கு வழி வகுக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கிரிமினல் வழக்கு தொடர்பான புதிய சட்ட திருத்தம் தாக்கல் செய்யும் போது பேசிய யோகி ஆதித்யநாத், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது, மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது, செய்யப்படும் திருத்ததால் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும் எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top