உள்ளாட்சி தேர்தல் வெற்றி: ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க புது யுக்திகளை பயன்படுத்த காங். திட்டம்

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும் கூட அந்த மாநிலத்தில் காங்கிரஸ் சிறந்த வளர்ச்சியை பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதற்கு காரணம், குஜராத் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று இளம் தலைவராக உருவாகி வந்தவர் அல்பேஷ் தாக்குர்.குஜராத் இளைஞர்களிடையே மிகுந்த நம்பிக்கை தந்தவர். ‘பாஜக’ வை தோற்கடிக்க வேண்டும்,குஜராத் மக்களை மத உணர்வில் இருந்து விடுவிக்கவேண்டும் என கிளம்பிய மூன்று இளைஞர்களில் அல்பேஷ் தாக்குர் ஒருவர் மற்ற இருவர் ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல் ஆகியோர்.

பாஜக வை வீழ்த்த இந்த தேர்தலில் அல்பேஷ் தாக்குர் காங்கிரஸ் உடன் கைகோர்த்தார். ரந்தன்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நின்றார்.இவரை எதிர்த்து பாஜக வின் முக்கிய வேட்பாளர் சோலங்கி லாவிங்ஜி தாக்குர் நிறுத்தப்பட்டார்.

இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி,அல்பேஷ் தாக்குர் என்ற மூன்று இளம் தலைவர்களில். ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார்.

குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா பின்தங்கியதற்கு இவர்களின் பங்கு மிக அதிகம்.

பஞ்சாப்பில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான அகாலிதளம் – பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு சிறப்பான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அங்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே போல் உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

எனவே, எப்படியாவது அங்கு ஆட்சியை பிடித்து விடலாம் என கருதுகிறார்கள். இதனால் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் இங்கு தனி கவனம் செலுத்தி வாக்காளர்களை கவர திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான பணிகளையும் இப்போதே தொடங்கி விட்டனர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது இங்கு ஆட்சியை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்று பல வியூகங்களை வகுத்து இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே ஆட்சி எல்லா வகையிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அவருடைய ஆட்சி முறையே சரியில்லை. இதனால் மக்கள் அவருக்கு எதிராக மாறி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பூத் வாரியாக கட்சியை பலப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்திக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் மாநில பாரதிய ஜனதா ஆட்சியின் தோல்வி குறித்து மட்டும் மக்களிடம் சொல்லவில்லை. அதற்கு சிறந்த மாற்றாக காங்கிரஸ் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் மக்களிடம் சொல்கிறோம். அது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சி வந்தால் என்ன திட்டங்கள் கொண்டு வருவோம் என்பதையும் வகுக்க இருக்கிறோம்.

இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை பாதுகாக்கும் திட்டம். வேலைவாய்ப்பு திட்டம், மாநிலத்தை முன்னேற்ற தொலைநோக்கு திட்டம் போன்றவற்றை உருவாக்கி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top