தினகரன் வெற்றி குறித்து நான் கருத்து கூற முடியாது – விஜயகாந்த்

தென்சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைகளுக்கு கேக் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவி பிரமேலதா, மாவட்ட செயலாளர் வி.சி. ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டதாக நான் கருதவில்லை. பொதுத்தேர்தல் தான் அதை முடிவு செய்யும். தினகரன் வெற்றி குறித்து அந்த தொகுதியில் போட்டியிட்டவர்களிடம் கருத்து கேளுங்கள். நான் கருத்து கூற முடியாது.

தினகரன் வெற்றி பெற்றதற்கு தி.மு.க.தான் காரணம் என்று அ.தி.மு.க. கருத்து தெரிவித்துள்ளது. இது தோற்பவர்களின் வழக்கமான புலம்பல்தான்.

உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது தான் தே.மு.தி.க. தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top