அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். இதை தொடர்ந்து பாலஸ்தீனம் மற்றும் சர்வதேச நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் சாலைகளில் இறங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா உள்பட 128 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.

ஐநா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகளில் ஒன்றாக கவுதமாலா, டெல் அவிவ் நகரில் உள்ள தனது தூதரகத்தை ஜெருலேமுக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவுதமாலா அதிபர் ஜிம்மி மோராலெஸ் கூறியுள்ளார். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா, அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top