ஜப்பானில் வரலாறு காணாத அளவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரியவந்துள்ளது.

கடந்த 1899-ம் ஆண்டு அந்நாட்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தன. நாளடைவில் படிப்படியாக அங்கு பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது.

மேலும் இரண்டம் உலக போரின் பொது 1945ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது. இந்த அணு குண்டு தாக்குதலில் ஜப்பான் மக்கள் பலர் உயிர் இழந்தனர். மனிதகுல வரலாற்றில் கருப்பு தினமாக கருதப்படும் இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஜப்பான் மக்களுக்கு அளித்தது.

இந்த அணு குண்டின் கதிர்விச்சு மனிதர்களை மிகவும் பாதித்தது. அதன் தாக்கம் இன்று வரை நிண்டு வருகிறது. இதன் பின்னரே ஜப்பான் மக்களின் பிரபு விகிதம் குறைய துவங்கியதாகவும் கூறப்படுகிறது.

சுறுசுறுப்புக்கு பெயர்போன ஜப்பானியர்களில் 27.2 சதவீதம் மக்கள் 65 வயதை கடந்த முதியவர்களாக உள்ளனர். அதேவேளையில், 14 வயதுக்கு குறைவானவர்கள் எண்ணிக்கை 12.7 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் பிறப்பு விகிதம் 4 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு 13 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த இறப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top