எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர்: தினேஷ்

அட்டகத்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வர வெறுப்பு பெற்றது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை படத்தில் நடித்த தினேஷ், அதில் சிறப்பாக நடித்து இருந்த தினேஷ் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டார். இதை தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த படங்கள் சில தொலைவியை சந்தித்தன. இதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது.

தற்போது, தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘உள்குத்து’. இதில் இவருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் பி.கே.பிலிம் பேக்டரி ஜி.விட்டல் குமார், இயக்குநர் கார்த்திக் ராஜு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா, நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் தினேஷ் பேசும்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top