இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விருப்பம் – பாக். ராணுவ தளபதி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தீவிரவாதம், எல்லை விவகாரம் ஆகிய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகள் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இரு நாட்டு பிரதமர்களும் சர்வதேச சந்திப்புகளின் போதும் மற்றும் பல்வேறு உச்சி மாநாடுகளில் கலந்து கொண்டாலும், மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்ற செனட் சபையில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஜாவீத் பஜ்வா பிராந்திய பாதுகாப்பு குறித்து நேற்று பேசினார். செனட் சபையில் ராணுவ தளபதி பேசுவது அரிதான நிகழ்வாகும்.

இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக நாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம். இந்த சூழ்நிலையில், இந்தியா உடன் பேச அரசு முடிவெடுத்தால் அதற்கு ஆதரவாக ராணுவம் நிற்கும். இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண பாகிஸ்தான் விரும்புகிறது.

இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு அனைத்து அயல் நாடுகளோடும் உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், இது குறித்து அரசு முடிவுசெய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புவதாக தெரிவித்தார்.

ஆனால், இந்தியப் படைகளின் பெரும்பகுதி பெரும்பாலும் பாக்கிஸ்தானுக்கு எதிராக இருப்பதாக ஜெனப் பஜ்வா கூறினார். அது மட்டும் இன்றி ஆப்கானின் உளவுத்துறையின் தேசிய இயக்க பாதுகாப்புடன் புது தில்லி ஒரு வலுவான இணைவைப்பை உருவாக்கியுள்ளது என்று ஜாவீத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top