இன்று இந்தியா-இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது.

இந்தியா-இலங்கை இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது. ஒருவேளை மாற்றம் இருந்தால் ஜெயதேவ் உனகட்டுக்கு பதிலாக பசவி தம்பி தேர்வு செய்யப்படலாம்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததால் 20 ஓவர் தொடரை இழக்காமல் இருக்க இலங்கை வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளதால் இன்றைய போட்டி மேலும் சவாலாக காணப்படுகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 13-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 12 போட்டியில் இந்தியா 8-ல், இலங்கை 4-ல் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணியிலும் 11 பேர் கொண்ட லெவனில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-

இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், பசலிதம்பி அல்து ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, யசுவேந்திரா சஹால்.

இலங்கை: திசாரா பெரைரா (கேப்டன்), டிக்வெலா, உபுல்தரங்கா, குஷால் பெரைரா, மேத்யூஸ், சமரவிக்ரமா, குணரத்னே, தாசுன், ‌ஷனகா, அகிலா தனஞ்செயா, சமீரா, நுவன்பிரதிப்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top