மாநிலங்கள் முழுவதும் செவிலியர்களின் சம்பளத்தை முறைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படும் ஒப்பந்த செவிலியர்கள் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், அப்படி பணி நிரந்தரம் செய்யப்படாததால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், போதுமான சம்பளம் தரப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. MRB என்கிற மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்தேடுக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சென்ற பின் பணி நிரந்தரம் செய்வது இயல்பு,அதுதான் சட்டம்.ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்களை தமிழக அரசு தங்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. ஆகையால் பணி நிரந்தரம் செய்யச்சொல்லி செவிலியர்கள் போரடி வந்தனர்

பணி நிரந்திரம் மற்றும் ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையின்படி தங்களது சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவர்களின் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை முறைப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செவிலியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக அனைத்திந்திய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான சம்பளம் தொடர்பாக தேவைப்பட்டால் மாநில அரசுகள் தனியாக சட்டம் இயற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top