மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன்சிங் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் பொது மோடி பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாக கூறி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாராளுமன்றத்தின் இரு அவையிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று டெல்லி மேல்-சபை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து இருந்தார்.

நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பிய கூச்சல் -குழப்பத்தால் டெல்லி மேல்-சபையில் நியமன எம்.பி.யான சச்சின் தெண்டுல்கரின் பேச்சு தடைபட்டது.

இன்று 6-வது நாளாக டெல்லி மேல்-சபையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர். இந்த அமளி காரணமாக டெல்லி மேல்-சபை வருகிற 27-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top