மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்

g.ramakrishnan

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் 22 வது தஞ்சை மாவட்ட மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு செயலாளர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.பாபநாசம் ஒன்றியம் மாதர் சங்க செயலாளர் விஜயாள் வரவேற்று பேசினார்.

மாநாட்டில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் ஷேல் கேஸ் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை விவசாயிகள், பொதுமக்கள், எதிர்ப்பை மீறி நிறைவேற்றக்கூடாது, மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை மாற்று வழிதடத்தில் இயக்கினால் அதற்கு பதிலாக புதிதாக ஒரு ரெயிலை இயக்கவேண்டும்.

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி சீரமைக்க வேண்டும், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைப்பணிகளை விரைவுப் படுத்த வேண்டும், தஞ்சை, பட்டுக்கோட்டை, தஞ்சை- அரியலூர், கும்பகோணம், விருத்தாலச்சலம், திட்டங்களுக்காக புதிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

தமிழக அரசு, காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய சதவீத அடிப்படையில் இழப்பீடு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலையை முறைகேடின்றி தொடர்ச்சியாக செயல் படுத்தி சட்டப்பூர்வமான ரூ.205 சம்பளத்தை குறைக்காமல் வழங்கவேண்டும்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top