பீகார் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்து விபத்து – 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சாசா முசா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை கூடும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த போது 100 தொழிலாளர்கள் ஆலையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். அதிக வெப்பம் காரணமாக கொதிகலன் வெடித்தாக கூறப்படுகிறது. கொதிகலன் தொடர்ச்சியாக பாரமரிக்கப்பட வில்லை. அதுவே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டதை அடுத்து ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்த சம்பவம் நவம்பர் 1 ம் தேதி ரெய்பரேலி நகரில் நடந்த தொழிற்சாலை வெடிப்பை நினைவுகூறுகிறது. இது நாட்டின் மோசமான தொழில்துறை பேரழிவுகளில் ஒன்றாகும். என்.டி.பி.சி மின் ஆலை வெடிப்புக்கு முக்கிய காரணங்கள்: “பாதுகாப்பு விதிமுறைகளை மீறுதல்” மற்றும் “விரைந்த உற்பத்தி நோக்கம்” என்று ஒரு அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முறையான பயிற்சி மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணியில் அமர்த்தப்படுவதாலும் இந்த விபத்துகள் ஏற்படுகின்றன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top