ஜெயலலிதா வீடியோ விவகாரம்: டி.டி.வி.தினகரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வாய்ப்பு

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் நேற்று வெளியிட்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவை சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ தெரியாமல் தான் வெளியிடுவதாக வெற்றிவேல் பேட்டியின்போது கூறினார்.

ஆனால் ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களில் வெற்றிவேல் தான் மிக முக்கியமானவர் மற்றும் தினகரனுக்கு ஏஜெண்டாக இருப்பது அவர்தான்.

தினகரனுக்கு தெரியாமல் வெற்றிவேல் எப்படி வீடியோ காட்சிகளை வெளியிட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக வெற்றிவேலிடம் போலீசார் விசாரணை நடத்தும்போது புதிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த காரணத்தால் வெற்றிவேலிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு டி.டி.வி.தினகரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக காவல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top