ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க இந்தோனேஷியா மக்கள் முடிவு

ஜெருசலேம்:

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் 11-நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இதை தொடர்ந்து பாலஸ்தீனம் மற்றும் சர்வதேச நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் சாலைகளில் இறங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச நாடுகள் பலஸ்தீன மக்களுக்கு அவர்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு 11 நாட்களுக்குப் பின்னர், இந்தோனேசியா, துருக்கி மற்றும் பாக்கிஸ்தானில் ஞாயிறன்று பெரும் மக்கள் பேரணிகள் நடைபெற்றன. இதில், இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சுமார் 80,000 திரண்டு முற்றுகையிட்டனர்.

பாலஸ்தீனிய கொடிகளைக் கையில் ஏந்தி பறக்கவிட்டபடி, டொனால்டு டிரம்ப் அவிவிலிருந்து ஜெருசலேத்துக்கு அமெரிக்கத் தூதரகத்தை நகர்த்துவதற்கான தனது திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் டிரம்ப்பை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்தோனேசியாவின் யூலேமா கவுன்சிலை சேர்ந்த ஒரு சிறந்த அறிஞர் அன்வர் அப்பாஸ் என்பவர் ஜகார்த்தாவில், டிரம்ப் தனது நடவடிக்கைகளைத் திரும்பப் பெறும் வரை அமெரிக்க தயாரிப்புகளை வாங்குவதை நிறுத்துமாறு இந்தோனேசியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கர்களின் தயாரிப்புகளை நம்பி இருக்க வேண்டியது இல்லை, “என்று அவர் மக்களை பார்த்து கூற,ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட – இந்தோனேசிய மற்றும் பாலஸ்தீனிய கொடிகளை அசைத்து “புறக்கணிப்பு!” என்று உரக்க கோஷமிட்டனர்.

முந்தைய அமெரிக்க எதிர்ப்பு போடமான, அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பதற்காக போராட்டம் தோல்வியடைந்தன.

இந்த மனு மீது, தலைவர்களும் அறிஞர்களும், இஸ்ரேலிய தலைநகரமாக ஜெர்சிலமை அங்கீகரித்து உடனடியாக திரும்பப் பெறும்படி வலியுறுத்தினர், ஏனென்றால் அது சர்வதேச நீதிக்குத் தீங்கிழைக்கிறது, பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, சமாதான முயற்சிகள் குறைந்துவிட்டன.

டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு தங்களது தூதரகங்களை நகர்த்துவதை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும், டிரம்ப்பின் அறிவிப்பை விவாதிக்க அவசரகால அமர்வு ஒன்றை நடத்த ஐ.நா. பாதுகாப்புக் குழுவை வலியுறுத்தியது.

முஸ்லீம் தலைவர்களின் சபை தலைவர் மவ்ரூஃப் அமீனின் தலைவரே, “அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார வழிகளில் பாலஸ்தீனிய சுதந்திரத்திற்காக அரசையும் உலகையும் எதிர்த்து ஒன்றுஇணைந்து போராடுவோம்” என்று கூறினார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ “ஜோக்கோய்” விடியோடோ, டிரம்ப்பின் நடவடிக்கை ஐ.நா. தீர்மானங்களை மீறுவதாக உள்ளது என்று கடுமையாக கண்டித்தார்.

இந்தோனேசியா இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர மற்றும் அரசியல் உறவுகளோ இல்லை; ஆனால் நீண்ட காலமாக பாலஸ்தீனிய அரசியலுக்கான ஒரு வலுவான ஆதரவை தெரிவித்து வருகிறது.

ஜகார்த்தா போலீஸ் செய்தித் தொடர்பாளர் அர்கோ யூவோனோ, தேசிய நினைவுச்சின்ன பூங்காவில் இருந்து அமெரிக்க தூதுரகம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் அணிவகுத்தனர் என்று தெரிவித்துள்ளார்.

பேரணியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 20,000 பாதுகாப்புப் படையினர் பணியாற்றினர்.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top