புதிய காற்றழுத்த தாழ்வுநிலை; மழை இல்லை ;சென்னை வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அந்தமான் அருகே உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ காலம் நிலவினாலும், கடந்த 10 நாட்களாக வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ உருவாகவில்லை. அதனால் தமிழகம், புதுச்சேரியில் குறிப்பிடும்படியாக மழைப் பொழிவு இல்லை. இந்நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து குளிர்ந்த கடல் காற்று நிலத்தை நோக்கி வீசி வருகிறது. அதனால் மழை மேகங்கள் உருவாவது தடைபட்டு, மழை வாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இப்போதைக்கு தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை. அந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top