மோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்

அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அப்போது பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது.

நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 2012-ம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

குஜராத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 117 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று இருந்தது.

இந்த தேர்தலில் 150 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்து தேர்தல் பணிகளை செய்தனர். கட்சி தலைவர் அமித்ஷா இதற்கான வியூகங்களை வகுத்து இருந்தார்.

ஆனால், 100 தொகுதிகளை கூட எட்ட முடியாமல் 99 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவை குஜராத் மக்களை கடுமையாக பாதித்ததின் விளைவு தான் பாஜகவின் மோடி பிறந்த ஊரில் தோற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த தோல்வியை தற்போதைய வெற்றியின் மூலம் லாபமாக மாற்றியுள்ளார் ஆஷா பட்டேல்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top