‘பா.ஜனதா அரசை வெளியேற்ற கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன்’ – லாலு பிரசாத் யாதவ்

பாட்னா,

பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மத்திய பா.ஜனதா அரசை வெளியேற்ற போராடப்போவதாக கூறியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியைப்போல மக்களுக்கு எதுவும் செய்யாத ஒரு பிரதமரை இந்தியா இதுவரை கண்டதில்லை. மக்களுக்காக எதையும் செய்யாத ஒரே பிரதமர், மோடி ஆவார். வெறும் போலி வாக்குறுதிகளால் மக்களை தவறாக வழிநடத்துவதிலேயே குறியாக இருக்கிறார். மோடியை போன்ற ஒருவரின் தலைமையின் கீழ் மக்கள் எப்படி எந்த நிவாரணத்தை பெற முடியும்?

பா.ஜனதாவை எதிர்ப்பவர்களுக்கு மத்திய விசா ரணை நிறுவனங்கள் மூலம் தொல்லை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிரானவர்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட சதிச்செயல் மூலம் சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய நிறுவனங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது.

எனக்கு மட்டுமின்றி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்கு வங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களுக்கு வெறும் சாக்குபோக்குகளை கூறிக்கொண்டு மத்திய விசாரணை அமைப்புகள் தொல்லை அளித்து வருகின்றன.

பா.ஜனதா அரசை வெளியேற்ற எனது கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன். பா.ஜனதாவின் பிரித்தாளும் அரசியலுக்கு எதிராக போராடுவதற்காக அனைத்து மதசார்பற்ற சக்திகளும் இணைவதற்கு இதுவே சரியான தருணம்.

இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top