மீண்டும் இலங்கை கடற்படை கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்!

 

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து உள்ளன.

 

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும் காணாமல் போன மீனவர்களை தேடுவதிலும் ஈடுப்பட்டிருந்த மீனவர்கள் நீண்ட நாள் கழித்து  கடலில் மீன் பிடிக்கச்சென்றனர்.அந்த மீனவர்களை. சிங்கள கப்பற்படை  கல் வீசி தாக்கியிருக்கிறது

 

கடந்த 11ம் தேதி கடலுக்கு மீண்டும் மீன் பிடிக்கச் சென்ற. ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டி அடித்தது. இது குறித்து கடலோர காவற்படையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.இதுவரை நடவடிக்கை இல்லை.

 

இதனையடுத்து நேற்று ராமேஸ்வரம்,பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

 

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்ப படகுகளை இயக்கி உள்ளனர். அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.

 

இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்கள் படகுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் படகுகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top