மின்சாதனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: மத்திய அரசு

புதுடெல்லி:

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மின்சாதனங்களுக்கான வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்தி உள்நாட்டு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி உயர்வு பல்வேறு மொபைல் போன் நிறுவனங்கள் குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்களுக்கான விலை உயர்ந்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், புதிய வரி உயர்வு இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் விலையை அதிகரிக்க செய்யும். முன்னதாக ஜி.எஸ்.டி. வரி அமலானதும் ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விலை குறைந்தது.

மத்திய அரசின் வரி உயர்வு நடவடிக்கை காரணமாக இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்றாலும் ஆப்பிள் நிறுவனத்தின் உலக தரம் வாய்ந்த மொபைல் போன்கள் அளவிற்கு இந்தியாவில் உற்பத்தியில் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் உலக தரம் வாய்ந்த மொபைல் போன்கள் அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி ஆப்பிள் போன்கள் இந்தியில் உள்ள பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடியதாக உள்ளது. இந்தியா மக்கள் தரம் வாய்ந்த நல்ல தொழில்நுட்பம் கொண்ட போன்களை சாதாரண மக்களால் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. தற்சமயம் இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் ஆண்டிற்கு 50 கோடி செல் போன்களை உருவாக்கி வருகின்றனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகம் ஆகும்.

2017-ம் ஆண்டில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்களில் 10-இல் ஒன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த மேக் இன் இந்திய திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் தென்கொரியா நாட்டின் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் எந்த நிறுவனமும் உலக தரத்தை அடையவில்லை.

தற்சமயம் வரை ஐபோன் SE மாடல்களை மட்டும் இந்தியாவில் தயாரித்து வரும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களை இந்தியாவிலேயே தயாரிக்க மத்திய அரசிடம் வரி சலுகை கோரியிருந்த நிலையில், புதிய வரி உயர்வு அந்நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஆப்பிள் மட்டுமின்றி இறக்குமதியை நம்பி வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு புதிய வரி உயர்வு நிச்சயம் நல்ல செய்தியாக இருக்காது.

செல்போன்கள் மட்டுமின்றி வீடியோ கேமராக்களுக்கான இறக்குமதி வரியை 10% இல் இருந்து 15% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொலைகாட்சிகளுக்கு முன்பு இருந்த 10% வரை இருமடங்கு உயர்த்தப்பட்டு தற்சமயம் 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை ஏழு மாத காலத்திற்கான இறக்குமதி அளவு முந்தைய ஆண்டை விட 22% வரை அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் 256 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top