எனக்கு வரலாறு எழுதினால் அதில் `விக்ரம் வேதா’ முக்கிய இடத்தில் இருக்கும் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.

விஜய் சேதுபதி – மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது. சிறந்த திரைக்கதையுடன் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் பெரும் வெற்றி அடைந்தது. 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் விஜய் சேதுபதி பேசும் போது,

எனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா’ அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா’. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் – காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top