உலக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: இந்தியாவில் ரேஷன் கடைகள் மூடப்படும்

பியூனஸ்,

உலக வர்த்த ஒப்பந்த அமைப்பின் 11-வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் ஆர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக ,உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக வளரும் நாடுகள் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. முக்கியமாக, உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கப் பிரதிநிதி பங்கேற்கவில்லை.

இந்தியா போன்ற ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் ரேஷன் கடைகளை மூடும் உலக வர்த்த ஒப்பந்தத்தில் இந்தியா அரசு தெரிந்தே கையெழுத்துத்திட்டத்தை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியது. தற்போது மத்திய பதிகப்பு அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்தியா சார்பாக உலக வர்த்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அரசின் இந்த செயலை கண்டித்து மே 17 இயக்கம் போராட்டங்களை நடத்தியது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற குறி கோரிக்கை வைத்தது.

தற்போது, இந்தியா சார்பில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான குழு இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாணப்பட வேண்டும் என்று இந்தியத் தரப்பும் வலியுறுத்தி வருகிறது.

உலக வர்த்த அமைப்பின் விதிகளின்படி அதில் உறுப்பினராக உள்ள நாடுகளின் உணவுப் பொருள் மானியத் தொகை, அந்நாடுகளின் உணவு உற்பத்தில் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இது தொடர்பான விதிகளை மேலும் தளர்த்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இதனை ஏற்க மறுத்து வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top