பாரதீய ஜனதா-இந்துத்வா அமைப்புகள் மீது பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம்

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பகுதியில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நடந்து வந்தது. இதன் காரணமாக, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.தற்போதுதான் அந்த பகுதியில் அமைதி திரும்பி வருகிறது.

மங்களூரு மாவட்டம் பரங்கிபேட்டையில் இருந்து மாணி வரை 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைதி பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியது.

கர்நாடக மந்திரி ராமநாத்ராய் தலைமையில் நடந்த இந்த பேரணியை நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்து பேசினார். இதில் பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்புகளை கடுமையாக தாக்கி பேசினார், அவர் பேசியதாவது:-

மக்கள் எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துகிறார்கள். யார்? கலவரத்தை தூண்டுகிறார்கள் என்பதையும், கலவரத்திற்கு காரணம் யார்? என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலமாக ஆகட்டும், ராஜஸ்தான் ஆகட்டும் எங்கும் கலவரம் நடந்தாலும், குறிப்பிட்ட கட்சிக்காரர்களும், குறிப்பிட்ட மதத்தினரும் தூண்டிவிடுகிறார்கள் என்பதை மக்கள் தெரிந்து வைக்கிறார்கள். ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது.

எந்த இடத்தையும் கலவர பூமியாக மாற்றக்கூடாது. அமைதி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top