விஜய் படத்தை தொடர்ந்து ஆர்.கே.நகரை கைப்பற்றிய நிறுவனம்

வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்’. சரவண ராஜன் இயக்கத்தில் `ஆர்.கே.நகர்’ படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்க்கு பிரேம்ஜி இசைஅமைத்து இருக்கிறார்.

இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தன் வசமாக்கி இருக்கிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top