பொய்யான தகவல்களை பரப்புகிறார் மோடி – மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கடந்த 6-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி, இந்திய துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களை அழைத்து விருந்தளித்தார்.

இதை குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட மோடி, “குஜராத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க சதி நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த மன்மோகன் சிங், “மோடி பொய் சொல்கிறார். எனவே அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர், மோடியை கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “மோடி, அரசியல் லாபம் பெறுவதற்காக பொய்யான தகவல்களையும், கட்டுக்கதையும் கூறி வருகிறார். குஜராத் தேர்தல் தோல்வி பயத்தின் விரக்தி காரணமாக இதுபோல் அவதூறு பரப்புகிறார். பிரதமர் பதவி வகிப்பவர்களுக்கு இது அழகல்ல. எனவே அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top