வடகொரியாவுடன் முன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்

வாஷிங்டன்:

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி வரை வடகொரியா 23 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது.

கடந்த நவம்பர் 29ந்தேதி அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறும்பொழுது, புதிய ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்க கூடிய வலிமையை வடகொரியா பெற்றுள்ளது என்றும் கூறினார்.

அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட சூழ்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி முடித்தது. இந்த நிலையில், அணு ஆயுத சோதனையை கைவிடவில்லை எனில் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திடாது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி டில்லர்சன் கூறினார்.

ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்கா அக்கிரபிப்பு கொரியாவில் இருந்து விலகும் வரை எங்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து கொள்ள என் மக்களை காப்பதற்கு அணு ஆயுதத்தை உருவாக்கி வருகிறோம் என்று முன்னரே அறிவித்து இருந்தார்.

உலகின் வலிமையான அணு சக்தி நாடாக வடகொரியாவை உருவாக்குவேன் என இன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். இந்நிலையில், அணு ஆயுத பரிசோதனையை கைவிடுவது பற்றி முன் நிபந்தனை எதுவுமின்றி வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமெரிக்கா தயார் என டில்லர்சன் கூறியுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top