டிரம்ப் மீதான பாலியல் புகார்: விசாரணை நடத்த முடியாது என வெள்ளை மாளிகை அறிக்கை

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்கள். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரித்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ‘16 பெண்கள் மற்றும் டொனால்டு டிரம்ப்’ என்ற ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, டொனால்டு டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கேட்க வேண்டும் என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும், நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண்கள் கூறும் ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும். அதில் தான் குற்ற மற்றவர் என்பதை நிரூபிக்க அவர் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் கிறிஸ்டன் கில்லிபிரான்ட் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் டிரம்ப் பதவி விலக வேண்டும். பாராளுமன்ற குழு அவரது ‘செக்ஸ்’ விவகாரம் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

டிரம்ப் குறித்து அமெரிக்க மக்கள் உண்மையை அறிய இத்தகைய விசாரணை தேவை என ஜனநாயக கட்சியின் பெண்கள் பணிக்குழு தலைவர் லாயிஸ் பிராங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டொனால்டு டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது இதற்காக விரிவாக பதில் அளிக்கப்பட்டு விட்டது. மக்களும் வெற்றியை கொடுத்து அவர்களுக்கு பதிலளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்கிறபடி, பாராளுமன்ற விசாரணை நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top